தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதி கிராப்ட்டின் தீபாவளி சிறப்பு விற்பனைத் தொடக்கம்! - சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன்

சேலம்: காந்தியடிகள் பிறந்தநாள் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காதி கிராப்ட்டின் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் ராமன் தொடங்கி வைத்தார்.

salem collector started the khadi craft Diwali special sale

By

Published : Oct 2, 2019, 11:34 PM IST

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள காதி கிராப்ட் விற்பனை மையத்தில் தமிழ்நாடு கதர் கிராமத்து தொழில் வாரியம், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனைத் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் ராமன் காந்தியடிகள் படத்தைத் திறந்து வைத்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தீபாவளி சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 79 லட்சம் ரூபாய்க்கு கதர் விற்பனை செய்யப்பட்ட நிலையில் நடப்பாண்டுக்கு 85 லட்சம் ரூபாய் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கதர் விற்பனைக்கு 30 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.

காதி கிராப்ட்டின் தீபாவளி சிறப்பு விற்பனைத் தொடக்க விழா

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான துணி ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், இந்த சிறப்பு விற்பனையைப் பயன்படுத்தி அரசு ஊழியர்களும், பொதுமக்களும் கதர் ஆடைகளை வாங்கி, கிராம நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட உதவவேண்டும் என்றும் இந்ந தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: கட்டிப் புரண்டு சண்டை போட்ட பெண் காவலர்கள் - ஒருவர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details