தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக இருக்கின்றன: ரோகிணி - tamilnadu

சேலம்: மாவட்டத்தில் இருக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி கூறியுள்ளார்.

ரோகிணி

By

Published : Apr 24, 2019, 1:39 PM IST

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பயிற்சி அளிக்கவும் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் ஆகியவற்றை, அனைத்துக் கட்சியினர் முன்னிலையில், திருவள்ளூரில் அமைந்துள்ள மாநில மைய கிடங்கிற்கு, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி அனுப்பிவைத்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரோகிணி, " சேலத்தில் உள்ள வாக்கு இயந்திரங்கள் 24 மணி நேரமும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. தீவிர பாதுகாப்போடு வாக்கு எண்ணிக்கை நடக்கும் மையம் இருப்பதால் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்க வாய்ப்பு இல்லை. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நானும் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ள மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்துவருகிறேன்.

rohini

சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை இதுவரை ஐந்தாயிரம் அஞ்சல் வாக்குகள் பதிவாகியுள்ளன. இன்னும் கூடுதலாக அஞ்சல் வாக்குகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details