தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குற்றப்பின்னணி கொண்ட நபர்கள் கைது: சேலம் போலீஸ் அதிரடி - சேலம் மாநகர காவல்துறை

சேலம்: குற்றப்பின்னணி கொண்ட 44 பேரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சேலம் மாநகர காவல்துறை
சேலம் மாநகர காவல்துறை

By

Published : Sep 22, 2020, 10:57 AM IST

இது குறித்து சேலம் மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சேலம் மாநகரில் குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையிலும், பொது அமைதியை பாதுகாப்பதற்கும் பொதுமக்கள் அச்சமின்றி இருப்பதை உறுதி செய்யும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை காவல் துறையினர் தீவிரமாக எடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தலைமறைவு குற்றவாளிகள், பிடியாணை குற்றவாளிகள் ஆகியோரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அனைத்து காவல் நிலையங்களிலும் அந்தந்த காவல் ஆய்வாளர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு கடந்த இரண்டு நாட்களாக மேற்கொண்ட அதிரடி தேடுதல் வேட்டையில், சேலம் தெற்கு காவல் நிலைய சரகத்தைச் சேர்ந்த சேகர், கிச்சிபாளையத்தைச் சேர்ந்த முருகேசன் உட்பட 24 குற்றவாளிகளும், வடக்கு காவல் நிலைய சரகத்தைச் சேர்ந்த அம்மா பேட்டை பிரபாகரன், கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ஏழுமலை உள்ளிட்ட 12 குற்றவாளிகளும், மேற்கு காவல் நிலைய சரகத்தைச் சேர்ந்த ஆட்டிப்பட்டியைச் சேர்ந்த மாணிக்கராஜ், கவுதம் உட்பட எட்டு குற்றவாளிகளும் ஆக மொத்தம் 44 குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் சேலம் மாநகர காவல் துறையினர், குற்றப் பின்னணி கொண்டவர்கள் மீது தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

வன்முறை, வழிப்பறி திருட்டு உள்ளிட்ட சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details