தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் தரமற்ற சாலைகளை மாற்றி புதிய தார்ச்சாலை! அதிமுக வேட்பாளர் வாக்குறுதி - தேர்தல் பரப்புரை

சேலம்: அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் இன்று  சேலம் தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தரமற்று கிடக்கும் சாலைகளை மாற்றி புதியதாக தார்ச்சாலை அமைத்துத் தருவோம் என வேட்பாளர் வாக்குறுதியளித்தார்.

salem

By

Published : Apr 3, 2019, 1:21 PM IST

Updated : Apr 3, 2019, 2:15 PM IST

தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.

சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் இன்று சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட கெண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி, நெத்திமேடு, எஸ்.கே.கார்டன், புத்தூர், இட்டேரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது வாக்காளர்கள் மத்தியில் அவர் பேசுகையில், 'நெத்திமேடு, புத்துார், இட்டேரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் தரமற்ற கிடக்கும் சாலைகளை புதியதாக மேம்படுத்தி தார்ச்சாலை அமைத்துத் தருவோம். மேலும், இந்தப் பகுதியில் விடுபட்ட பணிகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவோம்' எனத் தெரிவித்தார்.

இந்த வாக்கு சேகரிப்பில் வேட்பாளர் சரவணனுடன், சேலம் நாடாளுமன்ற அதிமுக தேர்தல் பொறுப்பாளரும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான பொன்னையன், சேலம் மேற்கு எம்எல்ஏ சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிமுக வேட்பாளர் சரவணன் பரப்புரை
Last Updated : Apr 3, 2019, 2:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details