ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலம் இணைப்புச் சாலையை விரிவாக்க கோரிக்கை! - Road expansion

சேலம்: சேலம் நான்கு சாலை, இணைப்பு சாலையை விரிவாக்கம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

4ரோடு இணைப்பு சாலை
4ரோடு இணைப்பு சாலை
author img

By

Published : Jun 20, 2020, 1:56 PM IST

சேலம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநகர் மாவட்ட தலைவர் கோபிநாத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், "சேலம் மாநகர் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் விதமாக மாநகரில் பல்வேறு இடங்களில் பாலங்கள் அமைத்து சேலத்திற்கு பாலம் நகரம் என்று அழைக்கப்படும் வகையில் சிறப்பு பெற்றுள்ளது.
இருப்பினும் சேலம் நான்கு ரோடு பகுதியில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் இணைப்புச் சாலை விரிவாக்கம் செய்யாமல் இருப்பதாலும், ஐந்து ரோடு பகுதியில் இருந்து ஸ்வர்ணபுரி இணைப்புச் சாலை விரிவாக்கம் செய்யாமல் இருப்பதாலும், இரு சக்கர நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சிறப்பான முறையில் பாலங்கள் அமைத்தும் விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதால் மக்கள் முகம் சுளிக்கும் வகையில் இணைப்புச் சாலை நிலைமை உள்ளது. மேலும் செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் சத்திரம் இணைப்பு பாலம் பாதுகாப்பு அற்ற முறையில் தடுப்புச் சுவர்கள் மிகவும் சிதிலமடைந்து பல இடங்களில் தடுப்பு சுவர்கள் இல்லாமலும் இருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது.
எனவே இந்த பால் மார்க்கெட் பாலத்தையும் சீரமைத்து, இணைப்புச் சாலைகள் விரிவாக்கம் செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details