சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும் பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்கள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இன்று வரை (ஏப்.2 காலை 8 மணி வரை) உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட 4 கோடியே 77 லட்சம் ரூபாய் பணம், ரூபாய் 1.43 கோடி மதிப்பிலான வெள்ளி பொருள்கள் (405.73 கிலோ), ரூபாய் 36.68 மதிப்பிலான தங்கம், ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான தாமிர பொருட்கள் மற்றும் ரூபாய் 23.60 லட்சம் மதிப்பிலான சேலைகள் உள்ளிட்ட பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சேலம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.அ. ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் மொத்தம் 99 பறக்கும் படைகள், 99 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 11 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் மற்றும் ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி ஆகிய 2 தொகுதிகளுக்கும் கூடுதலாக 2 வீடியோ கண்காணிப்புக் குழுக்களும் என மொத்தம் 13 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதிலிருந்து (பிப்.26 முதல் ஏப்.02 காலை 8.00 மணி வரை) இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட 4 கோடியே 77 லட்சம் ரூபாய் பணம், ரூபாய் 1.43 கோடி மதிப்பிலான வெள்ளி பொருள்கள் (405.73 கிலோ), ரூபாய் 36.68 மதிப்பிலான தங்கம், ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான தாமிர பொருட்கள் மற்றும் ரூபாய் 23.60 லட்சம் மதிப்பிலான சேலைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.