தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோரிக்கைகள் நிறைவேற்றவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம் - தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் - சேலம் மாவட்ட செய்திகள்

சேலம்: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் பிப்ரவரி 17 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக வருவாய்த் துறை அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.

revenue officers state level conference
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம்

By

Published : Feb 7, 2021, 10:26 AM IST

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநிலம் தழுவிய கோரிக்கை மாநாடு சேலம் ஓமலூர் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் குமரேசன் கூறுகையில், "வருவாய்த்துறை அலுவலர்களின் 10 அம்ச கோரிக்கையான, அலுவலக உதவியாளர்கள் முதல் வட்டாட்சியர் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் அடிப்படை பயிற்சி, நில அளவை பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

அதேபோல் பதவி உயர்வு பெற துறைத்தேர்வுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது போன்று வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் விலக்கு அளிக்க வேண்டும், கருணை அடிப்படையிலான நியமனதாரர்களின் பணியின் வரன்முறை செய்யும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

தவறும்பட்சத்தில் பிப்ரவரி 17 முதல் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலகம் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் என்று" தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஓவிய காவலன் அசோக் குமார்!

ABOUT THE AUTHOR

...view details