தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் - பெற்றோர்கள் முதலமைச்சரிடம் கண்ணீர் மல்க மனு - சாதி வெறியாட்டம்

சேலம்: பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் பாப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி மர்மமான முறையில் திருமணமான 4 மாதத்தில் இறந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும்
மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும்

By

Published : Jan 16, 2020, 11:19 PM IST

பாப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி மர்மமான முறையில் திருமணமான 4 மாதத்தில் இறந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்நிலையில் ராஜேஸ்வரியின் உடலை மீண்டும் உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்று அவரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

ஆத்தூர் சித்தேரி பகுதியைச் சேர்ந்த பழனிவேல் , பெத்தநாயக்கன்பாளையம் பாப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பழங்குடி இன சமூகத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு கடந்த நான்கு மாதங்களாக மாமனார் - மாமியார் வீட்டில் ராஜேஸ்வரி வசித்து வந்துள்ளார். அப்போது அவரின் சாதியை சொல்லி பழனிவேலின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கேவலமாக பேசி கொடுமைப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது .

இந்நிலையில் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஸ்வரி, இரண்டு நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்துவிட்டார். இதனையடுத்து அவரின் உடல் சேலம் அரசு பொது மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று உடற்கூறாய்வு நடத்தப்பட்டு, மஞ்சள் காமாலை நோயின் பாதிப்பால் ராஜேஸ்வரி இறந்ததாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது .

மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும்: பெற்றோர்கள் முதலமைச்சரிடம் கண்ணீர் மல்க மனு

இதனை நம்பாத ராஜேஸ்வரியின் பெற்றோர், ராஜேஸ்வரி மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவரின் கணவர் பழனிவேலு மற்றும் பெற்றோர்கள் உறவினர்கள் என ஐந்து பேரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ராஜேஸ்வரியின் உடலை அரசு பொது மருத்துவமனையில் இருந்து வாங்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக தங்களுக்கு ஏற்பட்ட சாதிக் கொடுமைக்கு நீதி வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இன்று நேரில் மனு அளித்தனர். மகளின் சாவில் உள்ள மர்மத்தை முதலமைச்சர் வெளிக்கொண்டுவர காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று ராஜேஸ்வரியின் பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details