தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வேளாண் சட்டத்தின் நன்மைகள் குறித்து விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்' - எல்.முருகன் - BJP L. Murugan

சேலம்: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தின் நன்மைகளை விளக்கும் வகையில், தமிழக அளவில் 1000 விளக்கப் பொதுக்கூட்டங்கள் நாளை முதல் நடத்தப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சேலம்
bjp president

By

Published : Dec 15, 2020, 6:52 PM IST

சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா, வி.பி.துரைசாமி, சுதாகர் ரெட்டி, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், நரசிம்மன் உள்ளிட்ட மாநில அளவிலான முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

பின்னர் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், புதிய வேளாண் சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் விவசாயிகள் மத்தியில் தவறான பிரச்சாரம் செய்துவருகின்றன. அதனை முறியடிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் நாளை தொடங்கி வரும் 21ஆம் தேதி வரை ஆயிரம் இடங்களில், வேளாண் திருத்தச் சட்ட நன்மைகள் குறித்த விளக்கப் பொதுக்கூட்டங்களை பாஜக சார்பில் நடத்த உள்ளோம். இந்த கூட்டங்களில் மத்திய அமைச்சர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.

எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பு

விவசாயிகளின் நண்பன் மோடி என்ற பெயரில் இந்த விளக்கப் பொதுக்கூட்டம் ஒரு இயக்கமாக ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து நடத்தப்பட உள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "சட்டப்பேரவை தேர்தலுக்கு தமிழ்நாடு பாஜக தயார் நிலையில் உள்ளது. முதலமைச்சர் வேட்பாளர் குறித்தும் பாஜக போட்டியிடும் தொகுதிகள் குறித்தும் தேசிய தலைவர் முறைப்படி அறிவிப்பார்" என்றார்.

இதையும் படிங்க: வேளாண் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் - பாரதிய கிசான் சங்கம் வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details