தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளம்பெண் வரதட்சணைக்காக கொலை? - உறவினர்கள் போராட்டம்! - selam

சேலம்: வரதட்சணைக் கேட்டு இளம்பெண்ணை அடித்துக்கொலை செய்துவிட்டதாகக் கூறி உடலை வாங்க மறுத்து, உயிரிழப்புக்கு காரணமானர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இளம்பெண் உயிரிழப்பு

By

Published : Apr 30, 2019, 11:11 PM IST

சேலம் தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஹாமீம் அலி(28) - ஹசிபா (26) தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வருடம் முன்பு திருமணம் முடிந்து, 8 மாத பெண் குழந்தை உள்ளது. திருமணத்தின்போது வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கித் தருவதாக ஆஷிபா குடும்பத்தினர் கூறியதாகக் கூறப்படுகிறது. ஆனால், கூறியபடி நிலம் வாங்கித் தராததால் ஹாமீம் அலி குடித்துவிட்டு தினமும் ஹசிபாவை அடித்தும், தாயார் வீட்டுக்கு அனுப்பி நிலம் பெற்று வருமாறு தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளார்.

இதனால் ஆஷிபாவின் பெற்றோர்கள் அண்மையில் மஜ்ஜித் மூலம் 2 வருடத்திற்குள் 4 லட்சம் ரூபாய் வீட்டுமனை வாங்குவதற்காக கொடுப்பதாக உத்தரவாதம் அளித்ததாக கூறப்படுகிறது. இருந்தும் ஹசிபாவை மாப்பிள்ளை வீட்டார் சித்ரவதை செய்து வந்துள்ளார்.

வரதட்சணைக்காக கொலை செய்ததாகக் கூறி உறவினர்கள் போராட்டம்

இந்நிலையில், நேற்று தாதகாப்பட்டி பகுதியில் உள்ள அவரது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிபா பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அன்னதானப்பட்டி காவல்துறையினர், ஆசிபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் ஆசிபாவின் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் தங்களது பெண்ணை அடித்து கொலை செய்து விட்டதாகவும், இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து ஆசிபாவின் கணவர் குடும்பத்தினரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, ஆசிபாவின் தாய் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details