சேலம் மாவட்டம், கொண்டாலம்பட்டி பகுதியில், ’பிரியம்’ என்ற பெயரில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், இங்கு வரும் கரோனா நோயாளிகளிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகம் வசூலிக்கப்படுவதாகவும், அரசு அனுமதித்த நோயாளிகள் எண்ணிக்கையை விட கூடுதல் நோயாளிகளை ஒரே அறையில் அடைத்து வைத்து சிகிச்சை வழங்குவதாகவும் தமிழ்நாடு சுகாதாரத் துறைக்கு புகார் வந்துள்ளது.
அதனடிப்படையில் பிரியம் மருத்துவமனையில் ஆய்வு செய்த மாநில சுகாதாரத்துறை அலுவலர்கள், மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கூறப்பட்ட புகார்கள் உண்மை எனக் கூறி பிரியம் மருத்துவமனைக்கு கரோனா சிகிச்சையளிக்க வழங்கப்பட்டிருந்த அனுமதியை ரத்து செய்தனர்.
அதேபோன்று இந்திய மெடிக்கல் கவுன்சிலில் பதிவு பெறாத மருத்துவர் நவீன் குமார் இம்மருத்துவமனையில் சிகிச்சையளித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் மீது பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் வினோத் குமார் கூறுகையில், "எனது உறவினர் குமார், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்றாம் தேதி பிரியம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து 20ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, அவர் தற்போது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.