தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கே.என். லட்சுமணன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்! - பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் மறைவு

பாஜக தமிழ்நாடு முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கே என் லட்சுமணன் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்!
கே என் லட்சுமணன் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்!

By

Published : Jun 2, 2020, 2:23 PM IST

பாஜகவின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் உடல்நலக்குறைவால் சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு காலமானார்.

இவர் தமிழ்நாடு பாஜக தலைவராக 1984 முதல் 1989 வரையும் பின்பு இரண்டாவது முறையாக 1996 முதல் 2001 வரையும் பதவி வகித்துள்ளார். மேலும் 2001 முதல் 2006 வரை சென்னை மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்தார். இவரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில், "லட்சுமணன் அவர்களின் மறைவு செய்தியைக் கேள்விப்பட்டு வேதனை அடைந்தேன்.

மக்களுக்குச் சேவையாற்றுவதிலும் இயக்கத்தை வழி நடத்துவதிலும் அவர் முன்நின்றவர். அவசரநிலை காலத்திலும் சமூக கலாசார செயலிலும் அவர் ஆற்றிய பணிகள் நினைவில் கொள்ளத்தக்கவை" என்று குறிப்பிட்டிருந்தார்.

பாஜக தமிழ்நாடு முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் மறைவு

செவ்வாய்பேட்டை தேவாங்கர்புரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள லட்சுமணனின் உடலுக்குச் சேலம் பாரதிய ஜனதா கட்சியினர், தமிழ்நாடு பாஜக பிரமுகர்கள் ஏராளமானோர் திரண்டுவந்து அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: மோடி மீண்டும் பிரதமராக வர 70 சதவீத மக்கள் விருப்பம்: எடியூரப்பா

ABOUT THE AUTHOR

...view details