தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கபடி அணியில் இடம் கிடைக்காததால் காவல் அலுவலர் விபரீத முடிவு! - மாநில அளவிலான கபடி அணி

சேலம்: மாநில கபடி அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் காவலர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம், சேலம் காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Policeman tries to kill self, after failed entry into State level kabadi team

By

Published : May 18, 2019, 12:42 PM IST

தருமபுரி மாவட்டம், போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் பணிபுரிந்துவருபவர் காவலர் ராமகிருஷ்ணன். கபடி வீரரான இவர், தமிழ்நாடு அளவில் கபடி போட்டிகள் நடந்து வருவதை அறிந்து, மாநில அணியில் இடம்பெற முயற்சி செய்துள்ளார்.

ஆனால், கடுமையாக போராடியும் அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்த ராமகிருஷ்ணன், சேலம் வந்துள்ளார்.

சேலம் வீட்டிலும் யாரிடமும் சரியாக அவர் பேசவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில், நேற்று ராமகிருஷ்ணன் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்திள்ளார்.

தற்கொலை முயற்சி செய்த காவலர்
இதனை அறிந்த உறவினர்கள் அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details