கரோனா வைரஸ் பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. தடையை மீறி சாலையில் சுற்றித்திரியும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் மாநகர பகுதியில் தேவையில்லாமல் சுற்றித்திரியும் நபர்களை கட்டுப்படுத்தும் விதமாக புதுமையான முயற்சியை காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
வெளிமாவட்டங்களிலிருந்து சேலத்திற்குள் தேவையில்லாமல் சுற்றித்திரியும் நபர்கள் , ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு கண்காணிப்பு வார்டில் வைத்து பரிசோதனை செய்யப்படும். முடிவுகள் வந்த பிறகே அவர்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாலையில் சுற்றித்திரியும் மக்களை கட்டுப்படுத்த காவல் துறையினர் புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளனர். எனவே பொதுமக்கள் சாலையில் தேவையில்லாமல் சுற்றி திரிய வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.