சேலம் தொகுதி மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.ஆர். எஸ். சரவணனை ஆதரித்து சேலம் கோட்டை மைதானத்தில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கே.ஆர். எஸ். சரவணனை ஆதரித்து பேசினார். அப்போது, 'அதிமுக, பாஜக, பாமக கூட்டணி மெகா கூட்டணி இது வெற்றிக் கூட்டணி. கூட்டணி கட்சிகள் நல்ல நல்ல திட்டங்களை அறிவித்து வருகிறது. ஆனால், காங்கிரஸ் திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகள் ஒன்றுக்கும் உதவாத அறிக்கைகளாக உள்ளன.
ஸ்டாலினின் முதல்வர் கனவு ஒரு போதும் பலிக்காது - ராமதாஸ் - சேலம்
சேலம்: ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு ஒரு போதும் பலிக்காது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
டாக்டர் ராமதாஸ்
முதலமைச்சர் கனவு காணும் மு.க.ஸ்டாலின் கனவு ஒருநாளும் பலிக்காது. அவர் நடக்கும் போதும் தூங்கும் போதும் காரில் போகும்போதும் முதலமைச்சராக ஆகிவிடவேண்டும், தன்னுடைய அப்பா உட்கார்ந்த முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்து விட வேண்டும் என்று கனவு காண்கிறார். அது அவருக்கு கனவாகவே போய்விடும். 1949 இல் தொடங்கிய திமுக இந்த தேர்தலோடு காணாமல் போய்விடும். திமுகவை முடித்து வைப்பவர் ஸ்டாலின்தான்' என தெரிவித்தார்.