சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் தினக்கூலித் தொழிலாளர்களை பணி நிரந்தர செய்யவேண்டும் என்றும் முறைகேடான பதவி உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல மாதங்களாக பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன . ஆர்ப்பாட்டம் ஆதரவளித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பசுபதி கூறுகையில்," பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை, துணைவேந்தர் உடனடியாக நிறைவேற்ற முன்வரவேண்டும்.
முன்னாள் பதிவாளர் தற்கொலைக் கடிதத்தில் உள்ளதை முழுமையாக ஆய்வு செய்து விசாரணை நடத்தி, அவரது தற்கொலைக்கு காரணமானவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். இதை நிர்வாகம் உடனடியாக செய்ய வேண்டும்.