புகழேந்தி செய்தியாளர்கள் சந்திப்பு சேலம்:சேலத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் டிரைவர் கனகராஜ் குறித்து பேசினால் வழக்கு போடப்படும் என எடப்பாடி பழனிசாமி கூறுவது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமிக்கு துணிச்சல் இருந்தால் என் மீது வழக்கு தொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம் என்று சவால் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் உடன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு செல்கிறார். இது குறித்து என்னுடன் வேட்டியை மடித்து கொண்டு வர சொல்லுங்கள் பார்ப்போம் எனவும், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அனைவரையும் விசாரணை செய்த சிபிசிஜடி எடப்பாடி பழனிசாமியை விசாரணை செய்யாதது ஏன்? இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி உள்பட 12 பேரிடம் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு எடப்பாடி பழனிசாமியை விசாரிக்காமல் உள்ளது?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதியில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விரைந்து முடிக்கப்படும் என தெரிவித்தார். சசிகலா உளபட பல நபர்களிடம் விசாரணை நடைபெற்று உள்ள நிலையில் தற்பொது எடப்பாடி பழனிசாமியை விசாரணை செய்யாமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க:ஊழலைப் பற்றி பேச பிரதமர் மோடிக்கு தகுதியில்லை: முதலமைச்சர் ஸ்டாலின் பாய்ச்சல்!
மேலும், மதுரையில் நடந்த மாநாட்டில் விதிகளை மீறி வைக்கப்பட்ட கட்டவுட் விவகாரத்திலும் கூட காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் உள்ளே வரம்பு மீறி பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார். மதுரை மாநாட்டில் தனது சொந்த சகோதிாி கனிமொழி குறித்து அவதுாறு பேசியும் கண்டுகொள்ளாமல் உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன அண்டர்ஸ்டாண்டிங்? உள்ளது என தெரியவில்லை என்று கடுமையாக சாடினார்.
தொடர்ந்து பேசிய புகழேந்தி, முதலமைச்சரின் நடவடிக்கையால் திமுக தொண்டர்களே தலையில் அடித்துக் கொள்கிறார்கள். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி மீது நம்பிக்கை இல்லை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே கூறியுள்ளார் சிபிசிஜடி மீது நம்பிக்கை இல்லை என்று, தற்போது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து போராட்டம் நடத்தி வருகிறோம் விரைவில் இந்த வழக்கு கூறித்து சி.பி.ஜ விசாரணை கோர உள்ளோம். செந்தில் பாலாஜி சிறைக்குச் சென்ற போது திமுகவில் உள்ள அனைத்து அமைச்சர்களும் மகிழ்ச்சியில் பார்ட்டி வைத்து கொண்டாடினர்" என கூறினார்.
இதையும் படிங்க:K Annamalai: "ஊழலின் உறைவிடம் திமுக - அண்ணாமலை விமர்சனம்