தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு கிலோ ஆட்டுக்கறிக்கு ஒரு கிராம் வெள்ளி - புரட்டாசியை சமாளிக்க வியாபாரியின் புதுயுக்தி!

Latest Salem News சேலம்: புரட்டாசி மாதத்தில் அசைவ பிரியர்களை ஈர்க்க வெள்ளிக்காசு அளித்து அசத்தும் சேலத்து கறிக்கடை வியாபாரி.

salem

By

Published : Oct 6, 2019, 6:31 PM IST

Latest Salem News: சேலம் மாவட்டம், தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பி.எம்.பாபு. இவரது குடும்பத்தினர் சேலத்தில் மூன்று தலைமுறைகளாக ஆட்டுக்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர், திருச்சி மெயின் ரோடு பிரபாத் அருகில் ஆட்டுக்கறி விற்பனை செய்து வருகிறார்.

அப்பகுதியிலுள்ள ஆட்டுக்கறி கடைகளை விட இவரது கடையில் ஆட்டுக்கறி கிலோவுக்கு ஐம்பது ரூபாய் குறைத்து விற்பனை செய்யப்படுவதால், எப்போதுமே இவரது கடையில் கூட்டம் நிறையும். இந்நிலையில், தற்போது புரட்டாசி மாதம் என்பதால் கறி விற்பனையில், இவருக்கு மந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், விற்பனையை அதிகரிக்க நுட்பமாக சிந்தித்த பி.எம்.பாபு, அவரது கடையில் ஒரு கிலோ ஆட்டுக்கறி வாங்குபவர்களுக்கு ஒரு கிராம் வெள்ளிக்காசு இலவசமாக வழங்கப்படும் என விளம்பரப்படுத்தினார்.

பாபுவின் கறிக்கடை

இதனையடுத்து, தற்போது அவரது கடையில் விற்பனை களைகட்டியுள்ளது. மேலும் இதுகுறித்து பாபு, 'புரட்டாசி மாதம் முடிந்தாலும், தீபாவளி வரை கறி வாங்கினால் வெள்ளிக்காசு வழங்க உள்ளதாக' அதிரடியாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:

இறைச்சி வியாபாரத்தைப் புரட்டிப் போட்ட புரட்டாசி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details