தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி: சேலம் மக்களுக்கு ஆட்சியரின் அறிவுரை - salem ganesh chaturthi 2020

சேலம்: விநாயகர் சதுர்த்தி விழாவை அவரவர் வீடுகளில் கொண்டாடிட வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் தெரிவித்துள்ளார்.

meet
meet

By

Published : Aug 19, 2020, 9:45 AM IST

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விநாயகர் சதுர்த்தி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டம்
இக்கூட்டத்தில் ஆட்சியர் சி.அ. ராமன் பேசுகையில், "விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 22ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க பொது விழாக்களைத் தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகமாகக் கூடுவதைத் தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கவும் பொதுமக்கள் நலன்கருதியும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ அல்லது சிலைகளை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்வதோ, அச்சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதோ கூடாது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாடிட அறிவுறுத்தப்படுகிறது.

அவரவர் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடிட ஆட்சியர் அறிவுரை

பண்டிகை கொண்டாட தேவையான பொருள்களை வாங்க கடைகளுக்கோ சந்தைகளுக்கோ செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திட வேண்டும் என்றும் அனைத்து இடங்களிலும் தகுந்த இடைவெளியை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது" என்றார்.

கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் த. செந்தில்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிகர், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. திவாகர், மேட்டூர் சார் ஆட்சியர் வெ. சரவணன், துணை ஆணையர் எம். சந்திரசேகரன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் என். நடராஜன், வருவாய் கோட்டாட்சியர்கள் (சேலம்) மாறன், (ஆத்தூர்) எம். துரை, (சங்ககிரி) அமிர்தலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) என். தமிழரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:விநாயகர் சதுர்த்தி: அனுமதி கோரி களமிறங்கிய தனி ஒருவன்!

ABOUT THE AUTHOR

...view details