தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மோடி குறித்து இழிவாகப் பேசிய நெல்லை கண்ணன் சேலம் சிறையில் அடைப்பு!

சேலம்: பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தமிழறிஞர் நெல்லை கண்ணன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நெல்லை கண்ணன்
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நெல்லை கண்ணன்

By

Published : Jan 3, 2020, 2:39 PM IST

திருநெல்வேலியில் கடந்த 21ஆம் தேதி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநாட்டில் நெல்லை கண்ணன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இதனால், திருநெல்வேலி காவல் துறையினர் அவர் மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், அவரை தேச துரோக வழக்கில் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது தனது உடல்நிலையை காரணம் காட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நெல்லை கண்ணன்

மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், பாளையங்கோட்டை சிறை நெல்லை கண்ணனின் வசதிக்கு ஏற்றதாக இல்லை என்று கூறி இன்று சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

நேற்றிரவு மதுரை சிறைச்சாலையில் ஓய்வெடுத்த நெல்லை கண்ணன் இன்று காலை 9 மணி அளவில் மதுரையிலிருந்து காவல் துறையினரால் அழைத்து வரப்பட்டு, இன்று மதியம் சேலம் மத்திய சிறையில் பலத்த காவல் துறையினர் பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நீதிபதி உத்தரவின்படி வரும் 13ஆம் தேதிவரை சேலம் மத்திய சிறையில் நெல்லை கண்ணன் நீதிமன்றக் காவலில் இருப்பார் என்று சேலம் மத்திய சிறை துறை அலுவர்கள் தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நெல்லை கண்ணன் பெரம்பலூரில் கைது

ABOUT THE AUTHOR

...view details