தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுவனை திருநங்கையாக மாற்ற முயற்சிப்பதாக தாயார் தகராறு - சிறுவனை திருநங்கையாக மாற்ற முயற்சி

சேலம்: கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனை திருநங்கையாக மாற்ற முயற்சிப்பதாகக் கூறி, திருநங்கைகளின் மேம்பாட்டு மையத்தில் பெற்றோர் தகராறில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்கள் மேம்பாட்டு வினையகம் அலுவலகம்

By

Published : Aug 15, 2019, 8:29 AM IST

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் உள்ள கிரீன் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் மும்தா. இவரது மகன் அபு (16). இவர் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளார்.

இந்நிலையில், அபு கடந்த ஓராண்டாக ராமகிருஷ்ணா சாலையில் உள்ள மக்கள் மேம்பாட்டு வினையகம் என்ற திருநங்கைகள் குறித்து விழிப்புணர்வு செய்துவரும் அலுவலகத்தில், தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்துள்ளார். இதனால் அவர் அவ்வப்போது அங்கு சென்றுள்ளார்.

திடீரென கடந்த ஒரு வாரமாக அபு காணாமல் போனதால், பதறிப்போன பெற்றோர் அவரை தேடி வந்துள்ளனர். இதையடுத்து அவர் மக்கள் மேம்பாட்டு வினையகம் அலுவலகத்தில் இருப்பது தெரியவந்தது. பின்னர் அபுவின் தாயார் மும்தா, உறவினர்களுடன் ராமகிருஷ்ணா சாலை உள்ள மக்கள் மேம்பாட்டு வினையகம் அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது, அவர்கள் அங்கிருந்த நிர்வாகிகளுடன் அபுவை திருநங்கையாக மாற்றுவதாக குற்றஞ்சாட்டி தகராறில் ஈடுபட்டனர். மேலும் மகனை தங்களுடன் அனுப்பி வைக்குமாறு கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த அஸ்தம்பட்டி காவல்துறையினர், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அபுவை தாயாரோடு அனுப்பிவைத்தனர். பின்னர் மக்கள் மேம்பாட்டு வினையகத்தின் நிர்வாகிகள் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களிடம் நடத்திய விசாரணையில், "மக்கள் மேம்பாட்டு வினையகத்தைச் சேர்ந்தவர்கள் சிறுவன் அபுவை திருநங்கையாக மாற்ற முயற்சிக்கவில்லை. எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வை நாங்கள் செய்து வருகிறோம், அது தொடர்பான நிகழ்ச்சிகளில் அபு பங்குபெற அடிக்கடி அலுவலகத்திற்கு அந்து செல்வார். மேலும் கடந்த ஒருவாரமாக சேலத்தில் இருந்த அபு, யாரிடமும் சொல்லாமல் சென்னையில் இருந்துள்ளார். இதனை அறிந்த நாங்கள், அங்கு சென்று அவரிடம் பேசி, இங்கு அழைத்து வந்தோம்" என்று தெரிவித்தனர்.

மக்கள் மேம்பாட்டு வினையகம் அலுவலகம்

ABOUT THE AUTHOR

...view details