பிரதமர் மோடி, அமித் ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தமிழறிஞர் நெல்லை கண்ணன் சேலம் மத்திய சிறையிலிருந்து இன்று ஜாமீனில் வெளிவந்தார்.
ஜாமீனில் வெளிவந்த நெல்லை கண்ணன் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ஜாவித் அகமது கூறியதாவது:
“குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த 29ஆம் தேதி நடந்த மாநாட்டில் பங்கேற்ற நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜகவினர் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் கடந்த 2ஆம் தேதி புதுக்கோட்டையில் அவரை கைது செய்தனர். இதனையடுத்து நெல்லை கண்ணன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ஜாவித் அகமது பின்னர், அவருக்கு ஜாமீன் கோரி நெல்லை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நசீர் அகமது அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இது தொடர்பான ஆவணங்கள் சேலம் மத்திய சிறையில் சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து காலை 8 மணியளவில் அவர், பின்வாசல் வழியாக அனுப்பி வைக்கப்பட்டார்.
நெல்லை கண்ணனைக் காணவந்த செய்தியாளர்களும் பொதுமக்களும் ஏமாற்றமடைந்தனர். மறு உத்தரவு வரும்வரை அவர் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் ஒரு வாரத்திற்கு காலை, மாலை கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மோடி குறித்து இழிவாகப் பேசிய நெல்லை கண்ணன் சேலம் சிறையில் அடைப்பு!