தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெயலலிதாவின் டிரைவர் மரணத்தில் சந்தேகம்;  ஸ்ரீஅபிநவ் மீண்டும் விசாரணை - கார்விபத்து

ஜெயலலிதாவின் டிரைவர் கனகராஜ், உயிரிழந்த சம்பவத்தில் அது சாலை விபத்து இல்லை; அதில் சந்தேகம் இருப்பதாக கனகராஜின் அண்ணன் தனபால் மறுத்ததை அடுத்து, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் நீதிமன்ற அனுமதி பெற்று, மீண்டும் விசாரணையைத் தொடங்குகிறார்.

நீதிமன்றத்தின் அனுமதிபெற்று மீண்டும் விசாரிக்கிறார், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்.
ஜெயலலிதாவின் டிரைவர் கனகராஜ் மரணம் தொடர்பான வழக்கை

By

Published : Oct 21, 2021, 6:24 PM IST

சேலம்:முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மரணம் தொடர்பாக, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் நீதிமன்ற அனுமதி பெற்று மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்ததை அடுத்து, கொடநாடு தேயிலை எஸ்டேட்டில் கொலை, கொள்ளைச் சம்பவம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ் என்பவர், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கார் மோதி உயிரிழந்தார்.

மரணத்தில் சந்தேகம்

இதுதொடர்பான வழக்கு, ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று முடிந்தது. கனகராஜ் உயிரிழந்த சம்பவம் சாலை விபத்து என்று கூறப்பட்ட நிலையில், கனகராஜின் அண்ணன் தனபால் அதை மறுத்து இருந்தார். கனகராஜின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் தனபால் கூறியிருந்தார்.

மீண்டும் விசாரிக்கும் ஸ்ரீஅபிநவ்

இந்த நிலையில் கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளைச் சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை சூடு பிடித்துள்ளது.

கனகராஜ் மரணம் தொடர்பாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் நீதிமன்ற அனுமதி பெற்று மீண்டும் விசாரணையைத் தொடங்கி உள்ளார்.

கனகராஜ் மரணத்தில் மறைந்திருக்கும் சந்தேகங்கள், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: காவலர் வீர வணக்க நாள் - உயிர் நீத்த 377 காவலர்களுக்கு மரியாதை

ABOUT THE AUTHOR

...view details