சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வேலு தங்கமணி. இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட பொதுக்குழு உறுப்பினராகச் செயல்பட்டுவந்தார். வனவாசி பகுதியில் துணிக்கடை நடத்திவந்த இவரை கடந்த 16ஆம் தேதி இருவர் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேலு தங்க மணி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
படுகொலைகள் தமிழ்நாட்டில் அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன - முத்தரசன் - subramaniyan
சேலம்: தமிழ்நாடு அன்றாடம் படுகொலைகள் நடைபெறும் இடமாக மாறிவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
அவரது உடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர் வேலு தங்கமணியை வெட்டிய குற்றவாளிகள் தாங்களாகவே சரண் அடைந்தனர். இதன் பின்னணியில் யார் உள்ளனர் என இதுவரையில் காவல் துறையினர் கண்டுபிடிக்கவில்லை ஒரு முதலமைச்சரின் தொகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டனத்திற்கு உரியது" என்றார் .
மேலும், "தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் படுகொலைச் சம்பவங்கள் ஒரு அன்றாட நிகழ்வாக இந்த ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு அமைச்சர்களும் முதலமைச்சரும் பொறுப்பில்லாமல் பதில் கூறுகின்றனர்" என்றும் அவர் கூறினார்.