தமிழ்நாட்டில் தொடரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அந்த வகையில் சேலத்தில் மாநகர காவல் துறை சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வுப் பேரணி இன்று நடைபெற்றது.
பாலியல் குற்ற விழிப்புணர்வுப் பேரணி: 500 மாணவிகள் பங்கேற்பு!
சேலம்: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வுப் பேரணியில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர்.
school girls rally
இதை அந்த மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், மாநகராட்சி ஆணையர் சதீஷ் ஆகியோர் தொடங்கிவைத்தனர். இதில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு பதாகைகளை கையில் ஏந்தியவாறு நடந்துசென்றனர்.
அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தொடங்கிய இந்தப் பேரணியானது பெரியார் சிலை, திருவள்ளுவர் சிலை, டவுன் காவல்நிலையம் உள்ளிட்ட மாநகரில் உள்ள பிரதான சாலைகள் வழியாக சென்று மாநகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.