சேலம்:சித்தனூர் அருகேயுள்ள ஆவின் பால் பண்ணையில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று (ஜூலை.04) ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள பால், பால் பொருள்கள் உற்பத்திப் பிரிவு, பால் சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர், "கடந்த ஆட்சியின்போது ஆவின் ஊழியர்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.
ஆவின் நியமனத்தில் முறைகேடு
குறிப்பாக,234 பேர் முறைகேடாகப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி அவர்களை பணி நீக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்படும். ஆவினில் 636 முதுநிலை, இளநிலை ஆலைப் பணியாளர்களை நியமிக்க முறைகேடாகப் பணம் பெற்றுள்ளதாக வந்த தகவலை அடுத்து, அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அந்தப்பணியிடங்களுக்கு புதிதாக பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.