சேலம்: அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் அருகே முதல் தளத்தில் உள்ள அறுவை சிகிச்சை அறையின் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, இன்று (நவ. 22) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதன் காரணமாக, மருத்துவமனை வளாகம் முழுவதும் கரும்புகை சூழ்ந்த நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் அலறியடித்தபடி மருத்துவமனையை விட்டு வெளியேறினர். மேலும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த 65 நோயாளிகள், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அருகே உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த செவ்வாய்பேட்டை நிலைய தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு, மருத்துவமனை வளாகத்திற்குள் சூழ்ந்திருந்த கரும்புகையை வெளியேற்றி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இதையும் படிங்க:போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பது சமூகத்திற்கு நல்லதல்ல - நீதிபதி வேதனை!