தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

cylinder blast: விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த கே.என்.நேரு - k n Nehru visit at cylinder blast place in salem

வர்த்தக சிலிண்டர்களை பயன்படுத்துவோர் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என (Cylinder Blast) நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

cylinder blast  cylinder blast in salem  minister k n Nehru  k n Nehru  k n Nehru visit at cylinder blast place in salem  minister k n Nehru visit at cylinder blast place in salem
கே.என்.நேரு

By

Published : Nov 23, 2021, 7:15 PM IST

சேலம்: கருங்கல்பட்டி பகுதியில் சிலிண்டர் வெடித்த (Cylinder Blast) விபத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமானது. கட்டட இடிபாடுகளில் சிக்கி ராஜலட்சுமி (80) என்பவர் உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கே.என்.நேரு ஆய்வு

இந்நிலையில் அப்பகுதியை ஆய்வு செய்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பின்னர் செய்தியாளரிடம் பேசினார். அப்போது , “கோபி என்பவர் இனிப்பு பலகாரம் செய்ய வர்த்தக சிலிண்டர்களை பயன்படுத்தியபோது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ள நிலையில், 13 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இனிப்பு தயாரிக்க வர்த்தக சிலிண்டர்களை பயன்படுத்துவோர் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதனை மாநகராட்சி அலுவலர்கள் முழுமையாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த கே.என்.நேரு

இந்த விபத்து குறித்து நாளை (நவ.24) முதலமைச்சரை நேரில் சந்தித்து தெரிவிக்க உள்ளேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத்தை முதலமைச்சர் அறிவிப்பார்” என தெரிவித்தார்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோதா, சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: Cylinder Blast: சிலிண்டர் வெடித்து விபத்து: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details