சேலம்: மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று (ஜூலை 25) காலை 8 மணி நிலவரப்படி 72.55 அடியிலிருந்து 73.27 அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம், காவிரி நீர் பிடிப்புப்பகுதிகளில் மழை பெய்து வருவதால், அம்மாநில அணைகளிலிருந்து நீர் திறக்கப்படுகிறது. அதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது.