சேலம்:கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து போதுமான அளவு மழைப் பொழிவு இல்லை. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வெகுவாக குறைந்து வருகிறது. நேற்றும், இன்றும் அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 183 கன அடியாக உள்ளது.
தொடர்ந்து சரிந்துவரும் மேட்டூர் அணை நீர்மட்டம் - தொடர்ந்து சரிந்துவரும் மேட்டூர் அணை
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வெகுவாக குறைந்ததால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்துவருகிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1500 கனஅடி வீதம் நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் நேற்று 102.82 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 102.71 அடியாக சரிந்தது.
இனிவரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளதாக பொதுப் பணித்துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், மேட்டூர் அணையின் நீர் இருப்பு தற்போது, 68,399 டிஎம்சிஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.