தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்தால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்வு

சேலம்: கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்தால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் மீண்டும் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூர் அணை
மேட்டூர் அணை

By

Published : Sep 25, 2020, 11:29 AM IST

கர்நாடக மாநிலம், பிலிகுண்டுலு அணையிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சீராக இருப்பதால் சில மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மேட்டூர் அணை 100 அடி நீர் மட்ட அளவை எட்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி ஆகும். அணையின் கொள்ளளவு 93.47 டி.எம்.சி. ஆகும். கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர் பிடிப்புப் பகுதியில், கடந்த வாரம் பருவமழைப் பொழிவு அதிகமாக இருந்தது.

இதன் காரணமாக கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ் ஆகிய அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. உபரி நீர் தொடர்ந்து வந்ததால் செப்டம்பர் 21ஆம் தேதி, 89.77 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.

நேற்று முன்தினம் இரவு (செப்டம்பர் 23) வரை, 96.87 அடியாக இருந்த நீர் மட்டம், நேற்று காலை (செப்டம்பர் 24) 98.20 அடியாகவும், 60.83 டி.எம்.சியாக இருந்த நீர் இருப்பு, 62.53 டி.எம்.சியாகவும் மளமளவென உயர்ந்தது.

மேட்டூர் அணை
இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 25) காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம், 96.620 அடியை எட்டி உள்ளது. அணையின் நீர்மட்டம், 100 அடியை எட்ட இன்னும், 2.5 டி.எம்.சி நீர் தேவை என்பதால் இன்று (செப்டம்பர் 24) இரவுக்குள் அணை 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.காலை நிலவரப்படி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்ட பாசனப் பகுதிக்காக 20 ஆயிரம் கன அடி நீரும் மேற்கு, கிழக்கு கரை கால்வாய் பாசனத்திற்காக 850 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நீர்வரத்து
இன்று 100 அடியை எட்டினால், தொடர்ந்து மூன்றாம் முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டி ஹாட்ரிக் சாதனை படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details