கர்நாடகா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது. நேற்றைய நிலவரப்படி 82 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 108 அடியை எட்டியுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் திடீர் உயர்வு! - மேட்டூர் அணையின் நீர்மட்டம்
சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்றை விட திடீரென்று 26 அடி கூடுதலாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணை
இதனையடுத்து, டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து 3 ஆயிரம் கன அடி தண்ணீரை முதலமைச்சர் பழனிசாமி நேற்று திறந்த நிலையில், நீர்ப்பாசனத்திற்கு 10,000 கன அடி நீர் இன்று திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், 500 கன அடி தண்ணீரை கால்வாய் பாசனத்திற்கும் திறந்து விடப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி, அணியின் நீர் இருப்பு 75.25 டிஎம்சியாக உள்ளது. மேலும், அணைக்கு வரும் நீரின் அளவு 1.50 லட்ச கன அடியிலிருந்து 50,000 கன அடியாக குறைந்துள்ளது.