தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 14 அடி உயர்வு! - நீர் மட்டம் உயர்வு

சேலம்: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 14 அடி அதிகரித்து, மொத்தம் 82 கன அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணை

By

Published : Aug 12, 2019, 12:25 PM IST

கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணசாகர் அணைகள் நிரம்பிய நிலையில் அதிக அளவில் நீர்வரத்து இருப்பதால் அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு இரண்டு லட்சம் கன அடி வீதம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது . மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 82 அடியாக உயர்ந்து உள்ளது.

மேட்டூர் அணை நீர் மட்டம் 14 அடி உயர்வு!
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

ஒகேனக்கல் பகுதியில் வினாடிக்கு 3 லட்சம் கன அடி நீர் வருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details