குடகில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக கர்நாடகா அணைகளிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த 81 நாட்களுக்குப் பிறகு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து தற்போது அணையின் நீர்மட்டம் 50 அடியாக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 50. 150 அடியாக உள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு: பொதுமக்கள் மகிழ்ச்சி - ஆடிப்பெருக்கு
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆடிப்பெருக்கிற்காக காவிரியில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது .
மேட்டூர் அணை
அணையிலிருந்து வினாடிக்கு 2000கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. குறிப்பாக நாளை ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட உள்ள நிலையில், மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 2 ஆயிரம் கன அடி அளவுக்கு திறந்து விடப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.