தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுமையான முறையில் மருத்துவர்கள் விழிப்புணர்வு! - உலக மனநல தினம்

சேலம் : அரசு பொது மருத்துவமனையில் தற்கொலையில் எண்ணங்களிலிருந்து வெளிவருவது குறித்த கருத்துகளை வில்லுப்பாட்டு பாடியும் கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் பொதுமக்களிடையே மருத்துவர்கள் புதுமையான முறையில்  விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

mental health awareness

By

Published : Oct 12, 2019, 9:39 AM IST

உலகம் முழுவதும் உலக மனநல தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. உலகம் முழுவதும் வேலைப்பளு, மன உளைச்சல் காரணமாக பலதரப்பட்ட மக்கள் தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டு தற்கொலையும் செய்துகொள்கின்றனர். இந்த மனநிலையிலிருந்து வெளிவர, பொதுமக்களுக்கு பல்வேறு சமூக அமைப்புகள், மருத்துவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில் சேலம் அரசு பொது மருத்துவமனையில் மனநல ஆரோக்கியம் மேம்பாடு, தற்கொலை தடுப்பு துறை சார்பாக மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களிடையே தற்கொலை எண்ணத்தை கைவிடுதல், அதிலிருந்து வெளிவருதல் வழிமுறைகளை கூறும்விதமாக புதுமையான முறையில் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

புதுமையான முறையில் சேலம் மருத்துவர்கள் விழிப்புணர்வு

மேலும், வில்லுப்பாட்டுப் பாடியும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பாடல்கள் பாடியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details