தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இந்தியாவில் மேலை நாடுகளுக்கு இணையான மருத்துவக் கல்வி!' - Welcome Program

சேலம்: நாட்டில் மேலை நாடுகளுக்கு இணையாக மருத்துவக் கல்வித் தரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக சேலம் மருத்துவ கண்காணிப்பாளர் தனபால் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

மருத்துவக் கல்லூரி

By

Published : Aug 2, 2019, 11:56 AM IST


சேலம் மாவட்டத்திலுள்ள மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 100 மாணவ, மாணவிகளுக்கான தொடக்க விழாவும் - பெற்றோர், மாணவ மாணவியருக்கான அறிமுக நிகழ்ச்சியும் இன்று மருத்துவக் கல்லூரி தலைவர் திருமால் பாபு தலைமையில் நடைபெற்றது.

இந்தியாவில் மேலை நாடுகளுக்கு இணையான மருத்துவக் கல்வி: தனபால்!

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்ட சேலம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் தனபால் பேசும்போது, ‘21 வருடத்திற்கு பிறகு மருத்துவக் கல்வியில் மத்திய அரசு மாற்றம் செய்து இருக்கிறது. இதன் மூலம் மேலை நாடுகளுக்கு இணையான கல்வித் தரமும் கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவையும் முழுமையாக கிடைக்கும் வகையிலும் கல்வி முறை மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது’ எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி தொடக்க விழா நிகழ்ச்சியில் அனைத்துத் துறைத் தலைவர்கள், மருத்துவர்கள், பெற்றோர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details