சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர் அறிவு என்கின்ற அறிவுச்செல்வன் (34). கறி கடை ஒன்றில் வேலைக்கு சென்று வந்தார். இவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி பார்வதியுடன் தகராறு செய்து வந்தார். அதனால், தனது மகன்களான கருணாஸ், கோகுல்ராஜ் ஆகியோரை அழைத்துக்கொண்டு ஆட்டையாம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு பார்வதி அழைத்து சென்று விட்டார்.
இதனால் அறிவுச்செல்வன் தனியே வசித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை அறிவுச்செல்வன் வீடு திறந்து கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை திறந்து பார்த்தனர். அங்கு அறிவுச்செல்வன் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இது குறித்து ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் குலசேகரன் மற்றும் காவலர்கள், அறிவுச்செல்வனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.