சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் நரேந்திரன் (41). இவர் 2016 ஆகஸ்ட் 9ஆம் தேதி சென்னையிலிருந்து பழனிக்குப் புறப்பட்ட, பழனி விரைவு ரயிலில், முன்பதிவு செய்து, பயணம் செய்துள்ளார். அந்த ரயில் சேலம் அருகே வந்துகொண்டிருந்தபோது, அதே முன்பதிவு பெட்டியில் பயணித்த 15 வயது சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நரேந்திரனை கைதுசெய்தனர். பின்னர் அந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. இந்நிலையில் வழக்கின் விசாரணை முடிந்ததால் நேற்று, தீர்ப்பு கூறப்பட்டது.