சேலத்தில் நேற்றிரவு (செப்.30) மக்கள் நீதி மய்யத்தின் விவசாயிகள் அணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமை வகித்துப் பேசிய விவசாய அணியின் மாநிலச் செயலாளர் மயில்சாமி, முன்னதாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில், "மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண்சட்டம் விவசாயிகளை மேலும் படுகுழியில் தள்ளியுள்ளது.
கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே உதவும் சட்டமாக இருக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை. மேலும் விவசாயிகள் பொருளாதார இழப்பைத் தான் சந்திப்பார்கள். இந்தச் சட்டத்தை எந்த ஒரு விவசாயியும் ஏற்றுக்கொள்ள மாட்டார்.