சேலம் மாநகரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதை தடுக்க மாநகர காவல் துறையினர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சேலம் பிரபாத் சிவஞான தேர்வு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக மாநகர காவல் துறைக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்தது.
சேலத்தில் லாட்டரி விற்பனை செய்த 17 பேர் கைது! - lottery ticket
சேலம்: தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி விற்பனை செய்த விற்பனையாளர் உட்பட 17 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் அன்னதானப்பட்டி காவல்நிலைய உதவி ஆய்வாளர் சத்தியமூர்த்தி தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கடை உரிமையாளர் சதீஷ் என்பவரின் வீட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த விற்பனையில் ஈடுபட்ட மணிமாறன், சரவணன்,திருமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, அறிவழகன் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் 850 மற்றும் 28 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு சேலம் அன்னதானப்பட்டி காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் கடை உரிமையாளர் சதீஷ் தலைமறைவாகியுள்ளார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.