தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவியை கொன்று தற்கொலை என நாடகமாடுவதாக புகார்.. - ஆட்சியர் அலுவலகம்

சேலம்: மனைவியை கணவனே கொலை செய்துவிட்டு தற்கொலை என்று நாடகமாடுவதாகக் கூறி, இறந்த பெண்ணின் உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பாக மறியலில் ஈடுபட்டனர்.

மனைவியை கொன்று தற்கொலையென நாடகமாடுவதாக புகார்.

By

Published : Jul 16, 2019, 9:39 AM IST

சேலம் மேட்டுத்தெருவை சேர்ந்த கரிஸ்மாவும், ஏற்காட்டைச் சேர்ந்த செல்வம் என்பவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு, நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் செல்வத்திற்கும் ஏற்காட்டை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுக்கும், கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கரிஸ்மா, செல்வத்திடம் விசாரித்தபோது அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றி கரிஸ்மா தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன்பின், நேற்று காலை கரிஸ்மா இறந்துள்ளார். இதையடுத்து, கரிஸ்மா தற்கொலை செய்து கொண்டார் என போலீசாரிடம் செல்வம் தெரிவித்துள்ளார்.

உறவினர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மறியலில் ஈடுபட்ட போது

இதையறிந்த உறவினர்கள், கரிஸ்மா தற்கொலை செய்து கொள்ளவில்லை. செல்வம் தான் கொலை செய்தார் எனக்கூறி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மறியலில் ஈடுபட்டனர்.

அதன்பின், காவலர்கள் நடத்திய சமாதான பேச்சுவார்த்தை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. கரிஸ்மா உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, ஏற்காடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, கணவர் செல்வத்திடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details