சேலம் அருகே உள்ள நாலேட்ஜ் பொறியியல் கல்லூரியில், ரோபோட்டிக் புராசஸ் ஆட்டோமேஷன் துறையில், யூ.ஐ.பாத்., யு.எஸ்.ஏ. ஏர்கன்டிஷனிங் துறையில், ஐ.ஏ.பி.எம்.ஓ., இந்தியா இன்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன் துறையில் இன்னோவேட்டிவ் சொல்யூசன் பெங்களூரு ஆகிய நிறுவனங்கள் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி, வேலை வாய்ப்பு அளிக்க முன்வந்துள்ளன.
மேலும், ஜப்பான் நாட்டில் இந்திய பொறியியல் பட்டதாரிகளுக்கு அதிகரித்துவரும் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு சேலம் மாணவர்களுக்கும் ஜப்பானில் வேலை வழங்க அந்நாட்டு முன்னணி நிறுவனங்கள் நாலேட்ஜ் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளன. இதற்கென தமிழ்நாடு மாணவர்களுக்கு ஜப்பான் மொழி பயிற்றுவிக்க ஏபிகே நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.