சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணனை ஆதரித்து 50-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பதற்காக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மேட்டு மக்கான் தெருவிற்குள் சென்றனர். அவர்கள் அனைவரையும் தெருவிற்குள் நுழையவிடாமல் இஸ்லாமிய சமூகத்தினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .
சேலத்தில் வாக்கு சேகரித்த அதிமுகவினருக்கு எதிர்ப்பு - இஸ்லாமியர்கள்
சேலம்: ஓட்டு கேட்க வந்த அதிமுகவினரை தெருவிற்குள் நுழையவிடாமல் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலத்தில் வாக்கு சேதரித்த அதிமுகவினருக்கு எதிர்ப்பு
“இஸ்லாமிய சமூகத்தை அழிக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் கூட்டணி எங்கள் தெருவிற்குள் நுழையக்கூடாது. நாங்கள் எக்காரணத்தைக் கொண்டும் உங்களுக்கு வாக்களிக்க மாட்டோம். எங்களுடைய இஸ்லாமிய சமுதாயத்தினர் இருக்கும் இந்த பகுதியில் நீங்கள் வர எந்த ஒரு தகுதியும் இல்லை" என இஸ்லாமியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக வாக்குவாதம் நீடித்ததால் அதிமுகவினர் பரப்புரை மேற்கொள்ளாமல் திரும்பிச் சென்றனர்.
Last Updated : Apr 10, 2019, 9:46 AM IST