தமிழ்நாடு

tamil nadu

பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான்.. கிரிக்கெட் வீரர் நடராஜன் தொடங்கி வைத்தார்!

By

Published : Dec 11, 2022, 1:37 PM IST

சேலம் அருகே பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்கள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பெண்கள் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் - கிரிக்கெட் வீரர் நடராஜன் தொடங்கி வைத்தார்
பெண்கள் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் - கிரிக்கெட் வீரர் நடராஜன் தொடங்கி வைத்தார்

பெண்கள் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் - கிரிக்கெட் வீரர் நடராஜன் தொடங்கி வைத்தார்

சேலம்:பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு மற்றும் தன்னார்வ அமைப்பின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக சேலம் நங்கவள்ளி பகுதியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியை இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நங்கவள்ளி பிரதான சாலையில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி 5 கிலோமீட்டர் 3 கிலோமீட்டர் என இரண்டு பிரிவுகளில் நடத்தப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்று மாரத்தான் ஓடினர். தொடர்ந்து முதல் ஐந்து இடம் பிடித்த மாணவிகளுக்கு கிரிக்கெட் வீரர் நடராஜன் அவர்கள் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். மாரத்தானில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: திருமணமான 27 நாட்களில் பெண் தூக்கிட்டு தற்கொலை: நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details