தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கணவனை கொன்ற வழக்கில் ஆசிரியை கைது! - அத்தனூர்பட்டி

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் கணவரை கொலை செய்த வழக்கில், அரசு பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

husband-murder-case-wife-arrested
கணவனைக் கொன்ற வழக்கில் ஆசிரியை கைது!

By

Published : Aug 3, 2021, 5:55 AM IST

சேலம்:வாழப்பாடி அடுத்த அத்தனூப்ர்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவருக்கும் , பேளூரைச் சேர்ந்த இளமதி(30) என்பவருக்கும் 11 ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஏற்பட்ட நிலையில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இளமதி வாழப்பாடி அருகே உள்ள வி. மன்னார்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிந்துவருகிறார். இந்த நிலையில், மணிகண்டன் அடிக்கடி மது போதையில் வீட்டிற்கு சென்று மனைவி இளமதியுடன் தகராறு செய்துவந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஞாயிறு மாலையும் குடிபோதையில் இளமதியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில், ஆத்திரமடைந்த ஆசிரியை இளமதி, தனது கணவர் மணிகண்டனை, உருட்டுக் கட்டையால், தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த மணிகண்டன் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளர் சுகுமார் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மணிகண்டனின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வாழப்பாடி காவலர்கள், மனைவி இளமதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:அதிவேகமாக வந்த கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு: வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

ABOUT THE AUTHOR

...view details