தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவியை அபகரித்த நண்பன்.. கத்தியால் வெட்டிய கணவர்.. - Crime news

சேலத்தில் தன்னுடைய மனைவி தனது நண்பருடன் தகாத உறவில் இருந்ததால், நண்பரை கத்தியால் குத்திய கணவரை போலிசார் தேடி வருகின்றனர்.

கணவருடன் செல்ல முடியாது.. கணவரின் நண்பருடன் வாழ்கிறேன்.. மனைவியின் வாழ்க்கை கேள்விக்குறி!
கணவருடன் செல்ல முடியாது.. கணவரின் நண்பருடன் வாழ்கிறேன்.. மனைவியின் வாழ்க்கை கேள்விக்குறி!

By

Published : Dec 9, 2022, 6:31 PM IST

சேலம்:திருவாக்கவுண்டனூரில் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பூபதி - சரண்யா தம்பதி. இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி சரண்யா திடீரென மாயமானார். எனவே இதுகுறித்து பூபதி சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

முக்கியமாக "எனக்கு பிடித்த வாழ்க்கையை தேடிச் செல்கிறேன்" என சரண்யா எழுதி வைத்திருந்த கடிதம் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டது. இதனால் விசாரணை சூடு பிடிக்கத் தொடங்கியது. பின்னர் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், பூபதியின் நண்பரான அம்மாபேட்டையைச் சேர்ந்த கண்ணன் என்பவரோடுதான் சரண்யா குடும்பம் நடத்தி வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சரண்யாவை மீட்ட காவல் துறையினர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, “என்னால் பூபதியுடன் செல்ல முடியாது. கண்ணனுடன் வாழ்கிறேன்” என சரண்யா கூறியுள்ளார். இதனால் இரு தரப்பையும் காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கண்ணனிடம் அலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பூபதி, சமாதானம் பேச நேரில் வரும்படி அழைத்துள்ளார். அதன்படி இருவரும் திருவாக்கவுண்டனூரில் உள்ள இருசாயி கோயில் அருகே சந்தித்துள்ளனர். அப்போது இருவரும் மது அருந்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த பூபதி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்ணனை உடலின் பல இடங்களில் வெட்டியுள்ளார். அப்போது அங்கிருந்து தப்பித்த கண்ணன், பைக்கை எடுத்துக்கொண்டு கொண்டலாம்பட்டி நோக்கி வேகமாகச் சென்றுள்ளார். கொண்டலாம்பட்டி பைபாஸ் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் மோதியதில் கண்ணன் படுகாயம் அடைந்துள்ளார்.

இதனையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் கண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இதுகுறித்து சூரமங்கலம் காவல் துறையினர் பூபதி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள பூபதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:மனைவிக்கு அடி, உதை : தடுக்க முயன்ற மாமியார் கொலை

ABOUT THE AUTHOR

...view details