தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் சூறைக்காற்றுடன் மழை: 2,000 வாழை மரங்கள் சேதம் - 2000 more banana tress damaged

சேலம்: சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததில், 2,000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வாழை சேதம்

By

Published : Apr 20, 2019, 11:44 PM IST

சேலம் மாவட்டம், எடப்பாடி, கொங்கணாபுரம், கன்னந்தேரி, பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி, கல்வடங்கம் பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கரில், வாழை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. நேற்று மாலை, அப்பகுதிகளில், சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால், 2,000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து சேதமடைந்தன.

மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆத்தூரில் 25.4 மி.மீ. அளவு மழையும், சேலத்தில் 22.5 மி.மீ. அளவும் மழையும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இன்று மாலையும் சேலம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சூறைக் காற்றுடன் மழை பெய்தது.

சூறாவளி காற்றால் வாழை நாசம்

ABOUT THE AUTHOR

...view details