சேலம்:வளிமண்டல சுழற்சி காரணமாக சேலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளன. இந்த நிலையில் சேலம் கிச்சிபாளையம் பகுதியில் உள்ள அண்ணாநகர், காந்திநகர் ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழைநீர் சூழ்ந்து நிற்பதால் நோய் தொற்று பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றும் இரண்டாவது நாளாக 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளதால் குழந்தைகளை வைத்துக்கொண்டு வீட்டில் வசிக்க முடியாத சூழல் இருப்பதாக இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.