சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறுகையில், "தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக முருகன் பொறுப்பேற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. துடிப்புமிக்க இளைஞர். மிகவும் சிறப்பாகச் செயல்படுவார்" என்றார்.
மேலும் அவர், "புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. திமுக தலைவர் ஸ்டாலின் விவாதிக்க தயாராக இருந்தால் நான் பதிலளிக்கிறேன். வேண்டுமென்றே அடாவடித்தனத்தை வெளிப்படுத்தி தேச விரோதப்போக்கில் ஒரு சில கட்சிகள் ஒன்றிணைந்து போராடும் போராட்டம் இது. உலகத்திலேயே வெளிநாட்டில் வாழும் நபர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்தும் ஒரு தரங்கெட்ட கட்சியாகவே உள்ளது திமுக. கீழ்த்தரமாகவும் கேவலமாகவும் தேசவிரோத சிந்தனைகள் கொண்ட சக்திகள் செயல்பட்டுவருகின்றன.