சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே எஸ் நாட்டமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கௌசல்யா(21). சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ.முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவர், கல்லூரிக்கு செல்லும் போது அதே ஊரைச் சேர்ந்த தறி தொழிலாளி பூபதி என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு பூபதியிடம் கௌசல்யா கூறியுள்ளார்.
காதலன் வீட்டின் முன்பு பெண் தர்ணா அப்போது, இருவரும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள். இதனால் திருமணத்திற்கு வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என பூபதி தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கௌசல்யா, பலமுறை பூபதியை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் பூபதி தொடர்ந்து மறுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், கௌசல்யா தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு பின்னர் பெற்றோர்களால் காப்பாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து, காதலுடன் தன்னை சேர்த்து வைக்குமாறு கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் கௌசல்யா புகார் அளித்தார். ஆனால், காவல் துறையினர் விசாரிக்காமல் அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து, பூபதியின் வீட்டிற்கு கௌசல்யா சென்றபோது வீடு பூட்டியிருந்ததால், வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதையறிந்த எஸ் நாட்டமங்கலத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு சென்று கௌசல்யாவை சமாதானம் செய்தனர்.
அப்போது கௌசல்யா கூறுகையில், என்னை திருமணம் செய்ய மறுத்த பூபதி உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்று தெரியவில்லை. அவர் எங்கு இருக்கிறார்? என கண்டுபிடித்து தரவேண்டும். என்னை காதலித்து ஏமாற்றிய பூபதியுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றார்.